ரஞ்சித் வெறும் இயக்குநராக மட்டுமே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார் – ரஜினிகாந்த் புகழாரம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது. “காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது. இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு […]

Continue Reading

தமிழக மாணவர்களுக்காகக் களமிறங்கிய பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர், […]

Continue Reading

கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த தலைப்பு : பா ரஞ்சித்

இயக்குனர் பா இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்படக்கண்காட்சி ஒன்றை நேற்று துவக்கி வைத்தார் பா.இரஞ்சித். “சாதியை ஒழிப்போம்.. சமூக மாற்றத்திற்கான மனித மாண்பை மீட்டெடுப்போம்” என்கிற முழக்கத்தோடு […]

Continue Reading

பா.இரஞ்சித்தின் அடுத்த முயற்சி!

இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் […]

Continue Reading