ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

பாரதீய ஜனதா ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து காட்சிகள் வேகமாக அரங்கேறின. நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு […]

Continue Reading

அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்க நாளை பிரதமர் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தைப் பிரதமர் நரேந்திர மோடி […]

Continue Reading

துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு வேட்புமனுத் தாக்கல் செய்தார்

தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இவரது பெயரை பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூடி தேர்வு செய்தது. காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும். மகாத்மா […]

Continue Reading