நான் கண்டுபிடித்தது அல்ல, நினைவுபடுத்தியது மட்டுமே : கமல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் வணிகர்கள் முன்னிலையில் பேசியதாவது, நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். […]

Continue Reading

ஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார். திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும் போது, “மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை, பாலிசி என்ன என்று கேட்கிறார்கள். மக்கள் நலம் தான் எங்கள் கொள்கை என ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆனாலும் திரும்ப திரும்ப […]

Continue Reading

மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து கமல் கூறியதாவது, “மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் குறித்து அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். […]

Continue Reading

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : கமல்ஹாசன்

ஆழ்வார் பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர் சந்திப்பு:   பெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கூற்று கீழ்த்தரமானது. அதனை சட்ட ரீதியான தண்டிக்க முடிந்தால் தண்டிக்க வேண்டும். பெரியாரை ஒன்றும் செய்திட முடியாது அவரது உயரம் அவ்வளவு அதிகம். பெரியார் சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை. அவரைப் பற்றி பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு தேவைப்படலாம். இது காவிரி மேலாண்மை அமைப்பதை திசை திருப்பும் செயல். நாம் திரும்பிடாமல் பாதுக்காக்க வேண்டும். நமக்க கலகங்கள் […]

Continue Reading