அவரது ரசிகர்களில் ஒருவனாக வந்திருக்கிறேன் : கமல்ஹாசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. நடிகர் சிவாஜி […]

Continue Reading

நாளைய கலாம் விழா – எங்க வீட்டு விழா : ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமாதி அருகே அமைக்கப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின் அந்த மணிமண்டப வளாகத்தில் முத்தமிழ் மையம் அமைப்பு சார்பில் நாளைய கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜிபி சந்தோஷ், ‘தப்பாட்டம்’ நாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், நடிகர் இமான் அண்ணாச்சி, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பட இயக்குநர் தயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக […]

Continue Reading

ஏ.பி.ஜே.வின் மணிமண்டபத்திற்கு அழகு சேர்த்த ஏ.பி.ஸ்ரீதரின் படைப்புகள்

தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம். இன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு […]

Continue Reading

அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்க நாளை பிரதமர் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தைப் பிரதமர் நரேந்திர மோடி […]

Continue Reading

கலாமின் நினைவுகளுடன் பயணிக்கும் இளைஞர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியிருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை ஆல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அதில், “கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இசை ஆல்பம் பற்றி பேசிய இயக்குனர் வசந்த், “காந்திக்குப் பிறகு ஒரு மாபெரும் தலைவரை இந்த தேசம் கண்டது. அவரது சிந்தனைகளை மறவாமல் இருக்க […]

Continue Reading