நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு […]

Continue Reading

பேராசிரியர் மா நன்னன் மறைவுக்கு அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் பிறந்த பேராசிரியரும், தமிழறிஞருமான மா நன்னன் இன்று சென்னையில் காலமானார். 94 வயதான இவர் தமிழில் கட்டுரை, பாடநூல்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அரசு தொலைக்காட்சியில் இவர் நடத்திய தமிழ்ப் பாடங்கள் வரவேற்பைப் பெற்றன. எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற முறையை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். மறைந்த இவரின் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி, […]

Continue Reading

தமிழக கட்சித் தலைவர்கள் குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அதில், “45 ஆண்டுகாலமாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சைத் தமிழன்; என்னைத் தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. அரசியல் […]

Continue Reading

முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி : மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பஸ் மறியலில் ஈடுபட்டார். இன்று காலை 9.15 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, மதிவாணன் உள்ளிட்டோரும் சென்றனர். புதிய பஸ் நிலையம் அருகில் மு.க.ஸ்டாலின் மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. […]

Continue Reading