மாரி 2-ல் இசையமைப்பாளரை மாற்றிய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். […]

Continue Reading

அண்ணனுக்கு ஜோடியான தம்பியின் ஜோடி

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் அனிருத் இசையில் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பாபு தயாரிக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் […]

Continue Reading

இப்படியும் படம் எடுக்கலாமா? சிம்புவின் புதிய முயற்சி

சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் முதற்கட்ட தகவலை சமீபத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்…’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டாம் முறை எழு. விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. […]

Continue Reading

பரோட்டா மாஸ்டர் ஆன யுவன்!

இயக்குனர் பாலா தற்போது, ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பாலா இயக்கும் படத்தில் பெரோஸ்கானின் மகன் ‘சாட்டை’ யுவன் நாயகனாக நடிக்கிறார். அதில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் வேடம். இதற்காக அவரை பரோட்டா போட கற்றுவருமாறு பாலா கூறினார். இதையடுத்து, யுவன் நாகூர் சென்று ஒரு பரோட்டா கடையில் ஒரு மாதம் பரோட்டா போட கற்று வந்திருக்கிறார். கடைக்கு வந்து போகிறவர்களிடம் அவர் யார் என்பதை சொல்லாமலே இதை செய்து முடித்திருக்கிறார். […]

Continue Reading

குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன்

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். […]

Continue Reading
prabhu deva nayanthara

பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா

நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக வலம் வந்தனர். திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துவிட்டார்கள். தற்போது இரண்டாவது இன்னிங்சில் பிசியான நடிகையாகிவிட்ட நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கொலையுதிர்காலம்’. இப்படத்தை ‘பில்லா-2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கின்றனர். […]

Continue Reading