ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]

Continue Reading

துருவ நட்சத்திரம் தோன்றும் காலம்?

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் விக்ரம் ஒரு உளவு அதிகாரியாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், சதீஷ், டிடி, வம்சி […]

Continue Reading