குணச்சித்திர நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் பணியாற்றியவர் ரூபன். இவர் விஜய்யின் கில்லி, விக்ரமின் தில், தூள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்பட சில படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ரூபனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறுதியானது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ரூபனுக்கு திடீரென மூச்சு திணறல் […]

Continue Reading

ஆச்சர்யப்படுத்தும் அம்சத்துடன் ஜீவா படம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படம் நடிகர் ஜீவாவின் 29வது படமாகும். படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் […]

Continue Reading

அறம் காட்டிய அம்மா !  அழகும், திறமையும் கொண்ட சுனுலஷ்மி!

  அறம் படத்தின் கதாநாயகிகள் 3 பேர். முதல் கதாநாயகி: ஆளுமை நிறைந்த பேரழகும் பெருந்திறமையும் கொண்ட கலைஞர் #நயன்தாரா. இரண்டாவது கதாநாயகி: படம் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை உருகிப்பதற வைக்கும், #அம்மா சுனுலஷ்மி. மூன்றாவது கதாநாயகி: அறம் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் குழந்தை #தன்ஷிகா (எ) #மகாலட்சுமி. இதில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சுனுலஷ்மி அழகும் திறமையும் கொண்ட நடிகை, அற்புதமான பெல்லி நடனக்கலைஞர். அறம் படத்தில் […]

Continue Reading

அறம் – விமர்சனம்!

எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களின் துன்பியலை உதாசீனப்படுத்தியும் ஊனப்படுத்தியுமே பழக்கப்பட்ட சினிமாவில், அச்சீழ்பிடித்த பழக்கத்தை இடக்கையால் புறந்தள்ளி விட்டு எப்போதாவது ஒருசில சினிமா மட்டுமே கேட்பாரற்ற எளிய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கான ‘அறம்’ பேசும். அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் மக்களுக்கெதிராக எப்படி வளர்ந்து நிற்கிறதென்பதை மேம்போக்காக சொல்லிக் கடந்து போகாமல், தனித்தனி செங்கலாகப் பிரித்து தைரியமாகக் கைநீட்டிச் சாட இதுபோல் இன்னும் நூறு ‘அறம்’ தேவைப்படுகிறது நமக்கு. ஒரு நாட்டின் அரசாங்கம், தனது ஒட்டுமொத்த […]

Continue Reading