ஜாம்பவான்களின் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர். இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்… “தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க […]

Continue Reading

ரத்னகுமாரின் புதிய படத்தில் தனுஷ்?

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் அவரது முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் தாமதமாகியிருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் […]

Continue Reading

சமுத்திரகனியின் மூன்று முகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே […]

Continue Reading

விஜய் சேதுபதி விலகியதால் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் முதல் 45 நிமிடங்கள் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியும் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது […]

Continue Reading

வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு திடீரென நிறுத்தப்பட்டது. ஆஸ்கர் பரிந்துரைக்காக ‘விசாரணை’ படத்தை அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால், வடசென்னை படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி, கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். […]

Continue Reading

தனுஷை விட்டு விலகிய அமலாபால்

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமலாபால். இந்த ஜோடி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இவர்கள் இருவரும் மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடித்தார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனுஷும் ‘ப.பாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் செயல்பட ஆரம்பித்தார். இதனால் ‘வடசென்னை’ படம் டிராப் ஆனதா? என்று […]

Continue Reading