தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது – கமல்ஹாசன்

தே.மு.திக வின் தலைவரும் நடிகருமான திரு விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று. மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான திரு கமல்ஹாசன் அவர்கள்.மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் @iVijayakant அவர்களே.

Continue Reading

தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய நடிகர் !

சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது. இதில் அவரது இளைய மகனும், நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் லண்டனில்  இருந்தார். தற்போது சென்னை திரும்பிய அவர் தன தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார். பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.

Continue Reading

எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் […]

Continue Reading

மகனைப் பற்றி பேச விரும்பவில்லை : விஜயகாந்த்

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், இயக்குநர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன், இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா, கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி, எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி, Stunner ஷாம், நடன இயக்குநர் சுரேஷ், நடிகர் […]

Continue Reading

சகாப்த நாயகனின் அடுத்த பட சிங்கிள்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் சகாப்தம் படத்திற்கு அடுத்ததாக உருவாகியிருக்கும் படம், மதுர வீரன். வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை மீனாட்சி அறிமுகமாகிறார். இவர்களுடன் சமுத்திரகனி, பி எல் தேனப்பன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பி ஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு […]

Continue Reading

பிக்பாஸ் ராசி.. நடிகைக்கு டும்.டும்..டும்..!

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. அவரது ஆறடி உயரமும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமால் நமீதா தன் ரசிகர்களை “மச்சான்ஸ்” என்று தான் கொஞ்சலோடு அழைப்பார். அந்த அழகிற்கே பல இளைஞர்கள் அடிமை இங்கு. சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால்வரை பரபரப்பாக பேசப்பட்ட “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ராசியோ என்னவோ, கலந்துகொண்ட […]

Continue Reading

இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் சிவாஜி, கமலை விட நல்ல நடிகர்கள் – விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்டித்து தேமுதிக சார்பில் இன்று மதியம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை கூறுகிறது. நெல்லையில் கந்து […]

Continue Reading

ரஜினி அரசியலால் தேமுதிகவிற்கு பாதிப்பு இல்லை : விஜயகாந்த்

கீழடி அகழாய்வு முகாமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், “தமிழகத்தில் ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும்; தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது.” என்று கூறினார். மேலும், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.” என்றார்.

Continue Reading