விஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நேரடி களம் கண்டவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது, தெலுங்கில் க்ராந்தி மாதவி இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கவுள்ளார். இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாம்.
Continue Reading