விதார்த்துடன் ஜோடி சேரும் அங்கமாலி டைரீஸ் நடிகை

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக `கொடிவீரன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கான `காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரத்தில், […]

Continue Reading

ஜோதிகா படத்தில் புதிய இசையமைப்பாளர்

`நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஜோதிகா அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். `தும்ஹரி சூளு’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்திற்கு `காற்றின் மொழி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள், […]

Continue Reading

விழித்திரு – உண்மையை கதைப்படுத்தி இருக்கும் கலைஞன் மீரா கதிரவன்.

அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]

Continue Reading

விழித்திரு விமர்சனம்!

விழித்திரு. 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் கடந்து வெளிவந்திருக்கிறது. இவ்வளவு தடைக்கற்களைத் தாண்டி வந்தபின்னும் பாருங்கள், விழித்திரு மழையிடம் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசம் தான். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக ஒரு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என தீர்க்கமான ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, படைப்பாளியாக நின்ற மீரா கதிரவனின் நம்பிக்கைக்கு முதலில் வாழ்த்துகள். “அவள் பெயர் தமிழரசி” விமர்சன ரீதியில் நல்ல பெயரைத் தந்திருந்தாலும் இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய இடைவெளி மீரா கதிரவனுக்கு. ஒரு இரவில் வெவ்வேறு […]

Continue Reading

டி ஆர் பேச்சால் கலங்கிய தன்ஷிகா

மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் தன்ஷிகா […]

Continue Reading

தெலுங்கு பேசும் குரங்கு பொம்மை

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’குரங்கு பொம்மை’. இப்படத்தில் நாயகனாக விதார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸூம் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பால் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் […]

Continue Reading

குரங்கு பொம்மை – விமர்சனம்

ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரிப்பில், நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. ஊருக்குள் மோசமான தாதாவாக இருக்கும் பி எல் தேனப்பனின் மரக்கடையில் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. ஆனாலும் இருவரும் ஒருவொருக்கொருவர் நட்புடன், நேசத்துடன் இருக்கின்றனர். இதற்கு மகன் விதார்த் உட்பட குடும்பத்தினரின் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் தேனப்பனுக்கு விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள திருட்டு சிலையை […]

Continue Reading