Tag: விமர்சனம்
திருட்டுப்பயலே 2 – விமர்சனம்
2006ல் வெளியாகி வெற்றி பெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக, சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருட்டுப்பயலே 2. நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா, அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நேர்மையாக இருப்பதால் ஏளனத்திற்கும், தொடர்ந்து இடமாறுதலுக்கும் ஆளாகிறார் பாபி சிம்ஹா. இதனால் மனம் வெறுத்துப் போகும் அவர், இனியும் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது […]
Continue Readingஅறம் காட்டிய அம்மா ! அழகும், திறமையும் கொண்ட சுனுலஷ்மி!
அறம் படத்தின் கதாநாயகிகள் 3 பேர். முதல் கதாநாயகி: ஆளுமை நிறைந்த பேரழகும் பெருந்திறமையும் கொண்ட கலைஞர் #நயன்தாரா. இரண்டாவது கதாநாயகி: படம் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை உருகிப்பதற வைக்கும், #அம்மா சுனுலஷ்மி. மூன்றாவது கதாநாயகி: அறம் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கும் குழந்தை #தன்ஷிகா (எ) #மகாலட்சுமி. இதில் இரண்டாவது கதாநாயகியாக வரும் சுனுலஷ்மி அழகும் திறமையும் கொண்ட நடிகை, அற்புதமான பெல்லி நடனக்கலைஞர். அறம் படத்தில் […]
Continue Readingஇப்படை வெல்லும் – விமர்சனம்
நவம்பர் பதினைந்தாம் தேதியில் தமிழகத்தில் பல முக்கியமான இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டு உத்தரபிரதேச சிறையிலிருந்து தப்பிக்கும் மிக மோசமான பயங்கரவாதி. அம்மா, இரண்டு தங்கைகள் அவர்களின் நடுத்தர வர்க்கக் கனவுகளோடு சென்னையில் மென்பொருள் பொறியாளனாக இருக்கும் ஒருவன். அவன் அசிஸ்டண்ட் கமிஷ்னரின் தங்கையை காதலிக்கிறான். அந்த போலீஸ் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால், அவளை நவம்பர் பதினைந்தாம் தேதி பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். குழந்தைகளை மகிழ்விக்கும் என்பதால் குறைந்த சம்பளம் என்றாலும் கூட மன […]
Continue Readingதிட்டிவாசல் – விமர்சனம்
மலை கிராமம் ஒன்றில் நகரத்தின் வாழ்க்கைமுறைக்கு சம்பந்தமே இல்லாத மக்கள் தங்கள் வாழ்விடத்திற்காகப் போராடும் கதை. நாசர் கிராமத் தலைவர் மூப்பனாக நடித்திருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன், வினோத் கின்னி ஆகியோர் அந்த கிராமத்து இளைஞர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.. படத்தில் நிறைய அறிமுகங்கள் நாயகிகள் உட்பட. மலை கிராமத்திற்கு அரசாங்கம் பட்டா போட்டுத் தந்த இடத்தை வனத்துறை அமைச்சர் அபகரிக்கத் திட்டம் போடுகிறார். வழக்கம்போல அவருக்கு ரேஞ்சர், காவல்துறை அதிகாரி, கலெக்டர் எல்லோரும் உடந்தை. வழக்கம்போல கிராம மக்கள் புலி […]
Continue Readingகருப்பன் – விமர்சனம்
ரேனிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் கருப்பன். காளைகளை அடக்குவதில் வல்லவரான விஜய்சேதுபதி, காட்டு வேலைக்கு போவது, சம்பாத்தித்த பணத்தில் தாய்மாமன் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றுவது என இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது. யாராலும் அடக்க முடியாத அந்த காளையை அடக்கினால், தனது தங்கையான நாயகி தன்யாவை […]
Continue Readingஸ்பைடர் – விமர்சனம்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஸ்பைடர்’ மகேஷ் பாபுவின் நேரடித் தமிழ்ப்படமான இதில் அவர் உளவுத்துறைக்காக பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, சமூக விரோதிகளைக் கண்டறிந்து கூறும் வேலை செய்கிறார். மிகவும் திறமைசாலியாக இருக்கும் அவர், அரசுக்குத் தெரியாமல், தனிப்பட்ட முறையில் சாப்ட்வேர் ஒன்றைத் தயார் செய்து, அதன் மூலம் அப்பாவி மக்கள் யாராவது கடத்தல்காரர்கள், கொலைகாரர்களின் […]
Continue Readingகொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்
கோகுல் கிருஷ்ணா, அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரியா மோகன், நீனு மற்றும் பலர் நடிப்பில் பெட்டி சி கே மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில், அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் விதமாக, உதய் சங்கரன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. அப்பா இல்லாமல் அம்மா மற்றும் அக்கா பிரியா மோகனுடன் வாழ்ந்து வரும் நாயகன் கோகுல் கிருஷ்ணா தனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக கேரளாவில் இரும்புக்கடை வைத்திருக்கும் அப்புக்குட்டியிடம் வேலைக்கு சேர்கிறார். அப்போது […]
Continue Readingகளவு தொழிற்சாலை – விமர்சனம்
கிருஷ்ணசாமி இயக்கத்தில் வம்சி கிருஷ்ணா, கதிர், களஞ்சியம், குஷி, செந்தில் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் களவு தொழிற்சாலை. சர்வதேச சிலைக்கடத்தலை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தில் மான் கராத்தே, தனி ஒருவன், குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணா, சர்வதேச சிலைக்கடத்தல்காரனாக நடித்திருக்கிறார். இவர் தஞ்சாவூரில் உள்ள பழமையான ஒரு கோவிலில் இருக்கும் பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரகத லிங்கத்தை கடத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார். வம்சி கிருஷ்ணா நேரடியாக களத்தில் […]
Continue Readingயார் இவன் – விமர்சனம்
இயக்குநர் சத்யாவின் இயக்கத்தில் சச்சின், இஷா குப்தா, பிரபு, கிஷோர், சதீஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘யார் இவன்’. திருமணமான முதல் நாளிலேயே இஷா குப்தா, தனது காதல் கணவன் சச்சினால் சுட்டுப் படுகொலை செய்யப்படும் காட்சியோடு பரபரப்பாக தொடங்குகிறது படத்தின் கதை. இஷா குப்தா உடலைத் தேடும் போலீசாருக்கு கிடைக்காமல் போய் விட, சச்சினை கைது செய்து சிறையில் அடைத்து விசாரிக்கின்றனர் போலீசார். காதல் கணவனான சச்சின், திருமணமான […]
Continue Reading