சினிமா தற்போது விவசாயமாகி விட்டது : சேரன்

கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Continue Reading

விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய தனுஷ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 50 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் […]

Continue Reading

நெடுவாசல் களத்தில் ஆரி

நெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தினார்.தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கலைத்து ஒன்று சேர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். மேலும் இம்மண்ணையும் விவசாயத்தையும் காக்க மாணவர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் மருத்துவராக வருவேன் நான் பொறியாளராக வருவேன் நான் கலெக்டராக வருவேன் என்கிற மனப்பான்மையை விடுத்து நாங்கள் […]

Continue Reading

உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களின் மாற்றத்தில் உள்ளது – ஆரி

அன்னையர் தின’த்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடி அவர்களுக்கு ‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை  அறிவித்தார் ! இன்று அன்னையர் தினத்தில் தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் உணவு உண்டவர் . நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன் ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டு சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை ‘அனாதையாக விட்டு விடாதீர்கள்’ […]

Continue Reading