அசுரன் படத்தில் இணைந்த “பொல்லாதவன்” “வடசென்னை” பிரபலம்….

  `வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Continue Reading

‘வட சென்னை’ படத்தின் முதலிரவு காட்சிகள் நீக்கப்படும் – இயக்குனர் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியானது ‘வட சென்னை’. அநேக மக்களால் பாராட்டப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வியலை கொச்சைப் படுத்துவதாக மீனவ அமைப்பினர் வெற்றிமாறன் மீதும் தனுஷ் மீதும் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ‘ படத்தின் சில காட்சிகள் குறிப்பாக படகில் நடந்த முதலிரவு காட்சிகள் நிச்சயமாக நீக்கப்படும். அதற்கான பணிகள் […]

Continue Reading

”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்!

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது ‘வட சென்னை’. அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்த்ர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், ‘ இயக்குனர் வெற்றி மாறன் ஒரு முறை என்னை அணுகி, வட சென்னை படத்தில் ஹீரோவாக சிம்புவை நியமித்துள்ளேன். நீங்கள், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதமா..?? என்று கேட்டார். அதற்கு நான் இந்த […]

Continue Reading

ஜாம்பவான்களின் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர். இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்… “தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க […]

Continue Reading

கிராஸ் ரூட்டுடன் கைகோர்க்கும் கிளாப் போர்டு

சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்.. அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும், […]

Continue Reading

வெற்றிமாறன் பேனரில் புதிய படம்

‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா […]

Continue Reading