‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ – கவிஞர் வைரமுத்து

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விவகாரம் தொடர்பாக, இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி ‘800’ என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கலையாளர் விஜய் […]

Continue Reading

கட்டுப்பாட்டைப் பெரிதும்…. கைக்கொள்வீர் பெருமக்களே – வைரமுத்து டுவிட்

தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதன் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பஸ்போக்குவரத்து தொடங்கியது. அலுவலகங்கள் செல்லும் ஊழியர்களால் சாலைகளில் கார், இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இ-பாஸ் ரத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த தளர்வினால் கொரோனா பரவுமோ என்ற பீதியும் நிலவுகிறது. அதிகம் பேர் முககவசம் அணியவில்லை […]

Continue Reading

உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை”-ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கிய வைரமுத்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார். ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தன. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி நடந்திருப்பது இப்போது அம்பலமாகி உள்ளது. சமூக […]

Continue Reading

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல்

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் […]

Continue Reading

விஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் […]

Continue Reading

அடிப்படை நாகரீகம் கூட மறந்தது ஏன்? பாரதிராஜாவின் சூடான அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை […]

Continue Reading

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு.. வைரமுத்து காட்டம்!

தான் சொல்லாத கருத்துக்கள் பொதுவெளியில் பரப்பப்படுவதாக பாடலாசிரியர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று […]

Continue Reading

நெஞ்சில் துணிவிருந்தால்.. உள்ளடக்கம் சொன்ன வைரமுத்து!

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி மற்றும் ஹரிசுத்தமன் ஆகியோர் நடிப்பில்  தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தில் இமான் இசையில் வைரமுத்து ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’  குறித்து வைரமுத்து கூறுகையில், “நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் […]

Continue Reading

கோபாலபுரத்தில் கல்யாண வைபோகம்

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதி முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்களை, கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது […]

Continue Reading