50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.தினசரி சராசரியாக100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஊருக்கே […]

Continue Reading

நரேன் பிறந்த நாளில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி!

நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. நல்ல கதைகளில் நடிக்க கவனமாக […]

Continue Reading

‘பொன்னியின் செல்வன்’ யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் […]

Continue Reading

இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது – நடிகர் கார்த்தி

இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது – நடிகர் கார்த்தி ‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது. இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணி சம்மதம் […]

Continue Reading

நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது

நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையும் விருதுகளையும் வழங்கினர். அதேபோல் மரம் கருணாநிதி அவர்களின் சுற்றுச்சூழல் சேவைக்காக அவருக்கு 50 ஆயிரம் வழங்கினர், பிறகு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக திருவண்ணாமலையில் 83 […]

Continue Reading