Tag: Actor Kathir
மார்ச் 1ல் ரிலீசுக்கு தயாராகும் “சத்ரு”!
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். ஒளிப்பதிவு […]
Continue ReadingEXCLUSIVE: PARIYERUM PERUMAL OFFICIAL TRAILER
Director Pa Ranjith’s first film as producer is Pariyerum Perumal, starring Kathir and Kayal Anandhi in the lead roles. Directed by debutant Mari Selvaraj, this film is all set to release on September 28. The makers have now released the trailer of the film that is impactful and very natural. The film has got a […]
Continue Readingபரியேறும் பெருமாள் அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேட்டி..!!
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்குஅதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான்எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது. எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள்இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும்பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள்,வெயில் மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிறஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம்பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம்என்னை உற்சாகமூட்டியதும் , தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாகஇருந்தது. எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தபடத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும் இந்த படத்தில் பெரிதும்எதிர் பார்க்கலாம்” என்றார் உற்சாகமாக.
Continue Reading