அஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்

அஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் […]

Continue Reading

அல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் […]

Continue Reading

எந்த படமும் ஓடவில்லை, புலம்பிய அஜித் !

அஜித் இன்று தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் வரலாறு படத்தின் போது நடிகர் ராஜேஷிடம் மனம் விட்டு பேசியுள்ளார், இதில் ‘நானும் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கின்றேன். ஆனால், படம் தான் ஓடவில்லை’ என மிகவும் மனம் நொந்து பேசியதாக ராஜேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் அந்த சமயத்தில் ஜி, ஆழ்வார், கிரீடம் என தொடர் தோல்வி படங்களாக கொடுத்து […]

Continue Reading

8 வருடத்திற்குப் பின் அஜித்

அஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது. அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் […]

Continue Reading

வயதான தோற்றத்தில் இருந்து இளமைக்கு மாறும் நடிகர்

சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் […]

Continue Reading

ஆரம்பமானது, வடசென்னை பின்னனியில் அஜித் படம்

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று […]

Continue Reading

அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தில் கமல் மகள்

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இதுபற்றி விசாரித்தபோது, “ராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் […]

Continue Reading

இந்தப் பக்கம் ரஜினி-கமல்.. அந்தப் பக்கம் விஜய்-அஜித்.. மாஸ் காட்டக் காத்திருக்கும் உண்ணாவிரத மேடை!!

பெரிய குழியாக வெட்டி, தானாகவே போய் படுத்துக் கொண்ட கதையாகி விடும் போல தமிழ் சினிமாவின் நிலை. ஏற்கனவே வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட முக்கால்வாசி படங்கள் புட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், பல தயாரிப்பாளார்களின் கோவணத்தை முதற்கொண்டு உருவிக்கொண்டு ஓடவிட்டது. விட்ட கோவணத்தையாவது இந்த படத்தில் பிடித்து விடுவோம் என்றுதான் பல தயாரிப்பாளர்கள் மீண்டும் பெரிய நடிகர்களையே கோழி அமுக்குவது போல் அமுக்கி நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தான் பொறுத்தது போதும் என […]

Continue Reading

விஸ்வாசம் படத்தில் ‘வீரம்’ பட வில்லனுக்கு டப்பிங் பேசியவர்

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பட அதிபர்கள் போராட்டத்தால் மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஸ்டிரைக் முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போஸ் வெங்கட் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் […]

Continue Reading
அஜித்

அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க என்ன காரணம்?

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித் – முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது. ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான். இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் […]

Continue Reading