“V”யையும், அஜித்தையும் விடாத சிவா!

அப்படி என்ன திறமையை தான் கண்டாரோ அஜித், சிவாவிடம்?. அஜித்தை வைத்து இயக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவரோ சிவாவை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு, “தல தயவு செய்து அந்த சிவா வேண்டாம்” என்று அஜித் ரசிகர்களே கெஞ்சி வீடியோ அப்லோடினார்கள். ஆனால் அது எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், சிவா தான் என் அடுத்தப் படத்தின் இயக்குநர் என்று முடிவெடுத்து ஓய்வுக்குப் போய்விட்டார். வீரம் படத்திற்குப் […]

Continue Reading

அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், […]

Continue Reading

நயன்தாராவின் பார்வையில் ரஜினியும், அஜித்தும்

தமிழ்த் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது நான் பெரிய நடிகை அல்ல. சாதாரண நடிகை என்றாலும், அஜித் என்ற பெரிய ஸ்டாருடன் […]

Continue Reading

விவேகம் – விமர்சனம்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம். சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. சதிகாரர்களிடமிருந்து […]

Continue Reading

நயன்தாராவின் பாதி காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு இந்தியில் துணை நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு பழனி படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் படங்கள் குவிந்தன. கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது. சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார். தெலுங்கிலும் நிறைய படங்களில் […]

Continue Reading

விவேகத்துடன் இணைந்த வேலைக்காரன்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விவேகம் ரிலீஸை அஜித் ரசிகர்கள் பல்வேறு […]

Continue Reading

அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான், குறிக்கோள் அல்ல : கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், தமிழிலும் வெளிவர இருக்கும் சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். நானி, பவன்கல்யாண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னனி நாயகர்களின் திரைப்படங்களில் கைகோர்த்து வருகிறீர்கள். அடுத்து யாருடன் நடிக்க விருப்பம் என்று […]

Continue Reading