இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்

  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்…இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து […]

Continue Reading

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி”  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி […]

Continue Reading

விஜய்க்கு அடிக்க சொல்லித் தரப்போகிறவர் யார் தெரியுமா?

விஜய் படம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது டான்ஸ் என்றால், இரண்டாவதாக நினைவிற்கு வருவது ஆக்‌ஷன் காட்சிகள். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் “தளபதி62” படத்திற்கு இப்போதிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி தினம் ஒரு தகவல் படத்தைப் பற்றி கசிந்த வண்ணம் இருக்கிறது. இன்று வந்திருக்கும் தகவலின்படி, ஸ்டண்ட் மாஸ்டராக “அனல்”அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இவர் ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான “கத்தி” படத்தில் பணியாற்றியிருந்தார். மேலும் விஜய் […]

Continue Reading

காஜல் முதன்முறையாக பங்கேற்கும் நிகழ்ச்சி

சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டன்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26 ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவரைத் தவிர 10 கதாநாயகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் நிகழ்ச்சியில் […]

Continue Reading

‘பெப்சி’ போராட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். பயணப்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், படப்பிடிப்புகளைப் பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் […]

Continue Reading

பொன் விழாவில் ஒன்று கூடும் நடிகர்கள், நடிகைகள்

ஸ்டண்ட் யூனியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது தலைவர் அனல் அரசு பேசும்போது, ‘சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத்தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம் திரைக்கு வருகிறது. அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன், பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் […]

Continue Reading