“நீட்” என்னும் அரக்கன் – யார் காப்பார் நம் குழந்தைகளை?!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான். ஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் […]

Continue Reading

எனக்கும் அப்படி நடந்தது : சாமுராய் நாயகி

‘வரு‌ஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் அனிதா. விக்மின் ‘சாமுராய்’ படத்திலும் நடித்தார். தற்போது இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். “சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. நல்ல தொடக்கம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். என்றாலும், போராடதான் செய்தேன். எனக்கும் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த வி‌ஷயத்தில் இருந்து வெளியே வரவேண்டும். என்ன செய்வது? இந்த துறை அப்படி இருக்கிறது. எங்கள் காலத்தில் எல்லாம் ரொம்ப மோசம். […]

Continue Reading

மரணத்தின் பிடியில் தமிழ் சினிமா!

பொதுவாகவே எல்லா வர்க்கத்தினரும் கடனாளிகளாக வாழ்பவர்கள் தான். திருநெல்வேலி நாச்சிமுத்து மட்டுமல்ல உலக பணக்காரராக இருக்கும் நம் அண்ணன் அம்பானி கூட கடனாளி தான். தயாரிப்பாளர் அஷோக் குமார் மட்டுமல்ல மூன்று முதல்வர்களைக் கொண்ட நம் தமிழக அரசும் கூட கடனாளி தான். இங்கு எல்லா வகையான தவறுகளுமே மிக இயல்பாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது, கண்டு கொள்ளவோ எதிர்த்துக் கேட்கவோ ஆளே இல்லாமல்.அப்படியே யாராவது அத்தகைய அநீதிகளுக்கு எதிராக போராடினாலும் அதை வெறும் செய்தியாக மட்டுமே […]

Continue Reading

உடைந்தழுத உமாதேவி!

கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப் பூர்வமானதாக்கியிருப்பார். “அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க […]

Continue Reading

டாக்டர் அனிதாவிற்காக நடிகர் செய்த மகத்தான காரியம்!

தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட இளம் நடிகர்களில் எதையுமே தனித்துவமாக செய்யக் கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகட்டும், பொது விசயங்களுக்கு கருத்து தெரிவிப்பதாகட்டும் எதிலுமே துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட விஜய் சேதுபதி தற்போது, நீட் தேர்வினால் மரணமடைந்த மாணவி அனிதாவின் நினைவாக செய்திருக்கும் காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது சம்பந்தமாக விஜய் சேதுபதி வெளியுட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தேன். […]

Continue Reading

அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன விஜய்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல்வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்றும் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தனர். […]

Continue Reading