உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கால் டாக்ஸி.

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா  தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.   இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்” , “மரகத காடு” ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார்.  மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி,  போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.   தொழில்நுட்ப கலைஞர்கள்:  நடனம்– இராபர்ட், இருசன்;  ஸ்டண்ட்– எஸ்.ஆர்.ஹரிமுருகன்,  எடிட்டிங்– டேவிட் அஜய்,  ஒளிப்பதிவு– எம்.ஏ.ராஜதுரை,  பாடல்கள், இசை– பாணன்,  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.  இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.  தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    

Continue Reading

ஹர ஹர மகாதேவகி வரிசையில் ஜெயிக்கிற குதிர

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ஜெயிக்கிறகுதிர” இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்‌ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன் பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். […]

Continue Reading