Tag: Atharva
அதர்வாவை இயக்கும் சேட்டை இயக்குனர்!
பாணா காத்தாடி, பரதேசி உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பின் மூலம் நன்கு அறியப்பட்டிருப்பவர் நடிகர் அதர்வா முரளி. இவர் இப்போது “செம்ம போத ஆகாத” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், “இயக்குனர் ஆர்.கண்ணன் அவர்களுடன் இணைவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கப் போவது ஆர்.கண்ணன் தான் என்பது உறுதியாகியுள்ளது. இயக்குனர் […]
Continue Readingமீண்டும் வெற்றிக்கூட்டணியில் அதர்வா
மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுக்கும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் AAA படத்தையும் மற்றும் தன் 10-வது படமான, ஜீவா – […]
Continue Readingநயன்தாரா படத்தின் உரிமை த்ரிஷாவுக்கு
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக `இமைக்கா நொடிகள்’ உருவாகி வருகிறது. முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவின் கணவராக சாதுவான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் […]
Continue Readingஅதர்வா படத்தின் முக்கிய அறிவிப்பு
அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாத’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘இம்மைக்கா நொடிகள்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மே 17ம் தேதி மாலை 7 மணிக்கும், படத்தின் டீசரை மே18ம் தேதி மாலை 7 மணிக்கும் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், […]
Continue Reading