பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்தனர். இதையடுத்து சின்னத்திரை நடிகரான ஆசிம் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே ஹோட்டலில் இந்திரஜா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் […]

Continue Reading

கதாநாயகியாகும் பிக் பாஸ் பிரபலம்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ […]

Continue Reading

பிக்பாஸ் ஜூலிக்கு அடித்த பம்பர் லக்!

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டங்களின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானவர் ஜூலியானா. அந்த ஒற்றை அறிமுகத்தைக் கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களோடு பிரபலமாக அந்த போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஜூலி, அந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தகட்ட வேலைகளில் பிஸியானார். ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவியில் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். […]

Continue Reading

மனக் கவலையில் பிக்பாஸ் பிரபலம்!!

பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதலே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் 100 நாள் வரை பட்டையை கிளப்பிய நிகழ்ச்சி “பிக் பாஸ்”. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல பிரபலங்களையும் அவரவர் நடந்துகொண்ட விதங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சித்தும், அளவிற்கு அதிகமாக பாராட்டியும் வந்தனர். அதில் ரசிகர்களால் அதிகமாக விமர்சிக்கப் பட்டவர்கள் ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் தான். அதிலும் சக்திக்கு “ட்ரிக்கர்” சக்தி என்றெல்லாம் பட்டப் […]

Continue Reading

ஓவியாவிற்கு குரல் கொடுத்த சிம்பு

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் தொடங்கியது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளர்களாக நீக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 10 போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், பரணியை வெளியேற்ற தூண்டியது போன்று தற்போது ‘பிக்பாஸ்’ குடும்பத்தினர் அடுத்த டார்கெட்டாக ஓவியா குறி வைத்துள்ளனர். ஓவியா இங்கே இருந்தால் நாங்கள் வீட்டில் […]

Continue Reading

என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது : கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:- என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை […]

Continue Reading

ஒரு வீடு, 15 நபர்கள், 100 நாட்கள்

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். […]

Continue Reading