கமலுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காக தான். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நான் கவலைப்பட்டதில்லை. அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். […]

Continue Reading

அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, […]

Continue Reading

காட்டேரியில் கதாநாயகனாகும் பிரபல நடிகரின் மகன்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் […]

Continue Reading

எதிர்பார்ப்பை கிளப்பும் ஓவியாவின் பேய்ப் படங்கள்

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார். காமெடி கலந்த பேய்ப் படமாக உருவாக இருக்கும் […]

Continue Reading

கோபம், பாதுகாக்கப்பட வேண்டியது : கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். தற்போது தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நடிகர்கள் சக்தி, பரணி, நடிகைகள் காயத்ரிரகுராம், ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரை மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர்கள் தங்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் […]

Continue Reading

எல்லாக் கேள்விகளுக்கும் வீடியோவில் விளக்கமளித்த ஓவியா

தனியார் தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபலமான நபர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் அவரின் இயல்பான குணமும், குறும்புத் தனமும் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நடிகை […]

Continue Reading

`சத்யமேவ ஜயதே’ குறித்த கேள்விக்கு கமலின் பதில்

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதைத் தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார். இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை […]

Continue Reading

யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது : கமல்

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பது தான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. […]

Continue Reading