மத்திய அரசின் கடைக்கண் பார்வையும், பாராமுகமும் : கமல்

வருகிற 10-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக் கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘தமிழகம்’ என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இதில் தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து கூறுகிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாகவே தமிழகம் புறக்கணிக்கப்படுவது சோகம் என்றாலும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பக்கம் சற்றே கடைக்கண் பார்வை […]

Continue Reading

மீண்டும் நியூட்ரினோ ஆய்வு

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பசுமையாக காணப்படும் இந்த பகுதியில் மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த மையம் நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து பூமியில் ஏற்படக்கூடிய இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி கடந்த 2010-2011-ம் ஆண்டு இதற்காக ரூ.1520 கோடி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. […]

Continue Reading

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது

அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல், பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது. சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் […]

Continue Reading

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

வருமான கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுவரை நிறைய பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத நிலையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலுக்கான கெடு ஆகஸ்டு 5ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் பான் எண்ணுக்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading

ஜிஎஸ்டி- யால்  விலை குறையும் அதிகரிக்கும் பொருட்கள் முழு பட்டியல்

நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கும் முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும். எந்த பொருட்கள் விலை குறையும் என்று பொது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கடைகளில் […]

Continue Reading

நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் […]

Continue Reading

விவசாய கடன் தள்ளுபடி, மத்திய அரசு உதவி செய்யுமா? அருண் ஜெட்லி பதில்

மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட விவகாரம் […]

Continue Reading

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன், சிமெண்டு, மருந்துகள் விலை குறையும்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மொத்தம் 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இருக்கும். எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு வரி என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் இறுதி செய்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களின் விலை […]

Continue Reading