சினிமா தற்போது விவசாயமாகி விட்டது : சேரன்

கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Continue Reading

மிக மிக அவசரத்தில் பாட்டெழுதிய சேரன்

  பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். இப்படம் குறித்து அவர் பேசிய போது, “இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது […]

Continue Reading

சேரன் வெளியிடும் சிவாஜி சாங்

தன்னுடைய நடிப்பால் உலக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது நடிப்பைப் பாராட்டாதவர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். மேலும் இவரது நடிப்புக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் 277 படங்கள் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்ற படமே இவரது கடைசிப் திரைப்படமாகும். 2001ம் ஆண்டு ஜூலை மாதம் சிவாஜி கணேசன் உயிரிழந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் […]

Continue Reading

சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரண்ட்

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டனக் கூட்டம் நடத்தினர். அந்த […]

Continue Reading

ஜாக்கிரதை… ரஜினிக்கு சேரன் எச்சரிக்கை!

ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். […]

Continue Reading