குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8.15 மணி நிலவரப்படி பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. […]

Continue Reading

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2-வது மற்றும் இறுதிக் கட்டமாக நாளை 93 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 69 பேர் பெண்கள். பா.ஜனதா சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் […]

Continue Reading

மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் ட்வீட்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி எஸ் டி, டிமானிட்டைசேஷன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்த வசனங்கள்பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் மத்திய அரசின் திட்டங்களைக் குறை கூறும் விதமாக அமைந்துள்ள அத்தகைய வசனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை செளந்தர்ராஜன், எச் ராஜா உள்ளிட்டோர் கருத்துகளை வெளியிட்டனர். மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து […]

Continue Reading

இன்று துணை ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. இதில் பா.ஜனதா வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடு […]

Continue Reading

பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர், “மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற […]

Continue Reading

சிலை எங்கிருந்தாலும் மகிழ்ச்சி : ராம்குமார்

சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிலையின் அருகில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி சிலைக்கு அவரது மகன் ராம்குமார், பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் சிவாஜி சிலைக்கு […]

Continue Reading

ஆதரவு திரட்ட வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

14-வது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை கடந்த 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரது முன்னிலையில் தாக்கல் செய்தார். தனக்கு ஆதரவு அளித்த கட்சி தலைவர்களையும், அந்தந்த கட்சிகளின் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயாக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் அறிவிக்கப்பட்டதும் அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீராகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மத்திய […]

Continue Reading