திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் பங்கேற்கும்….மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் சிக்குகிறார்கள். தற்போது மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சமூக விலகல், கை கழுவுதல் நடிகர், நடிகைகள் தவிர மற்றவர்கள் முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துகிறார்கள். ஆனாலும் படப்பிடிப்புகளிலும் கொரோனா தொற்று பரவுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த 2 […]

Continue Reading

பிரபல தமிழ் நடிகர் கொரோனவால் மரணம்!!!

  கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.         கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

Continue Reading

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது – நடிகை ஜெனிலியா

நடகை ஜெனிலியா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார். தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் இந்தி நடிகரும் முன்னாள் முதல் மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு படங்களில் அதிகம் நடிக்கவில்லை. […]

Continue Reading

நடிகை தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு

நடிகை தமன்னாவின் தாய், தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று இந்தியா முழுவதும் ஊரடங்கையும் மீறி வேகமாக பரவி வருகிறது. நடிகர் நடிகைகளும் கொரோனாவில் சிக்குகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் நடிகர் அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் ராஜமவுலி உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தமன்னாவின் […]

Continue Reading

கொரோனாவால் மீன் வியாபாரியாக மாறிய மலையாள நடிகர்

கொரோனாவால் மீன் வியாபாரியாக மாறிய மலையாள நடிகர் கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 5 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நடிகர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுனமழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். […]

Continue Reading

கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடித்த யோகிபாபு

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் கைகளை அடிக்கடி கழுவவும் வற்புறுத்தி அரசு விழிப்புணர்வு படங்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படங்களில் சசிகுமார், சுஹாசினி, தேவயானி ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படங்களை கட்டில் திரைப்படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ்பாபு இயக்கினார். தற்போது அரசின் இன்னொரு கொரோனா விழிப்புணர்வு படத்தையும் அவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்து இருக்கிறார். அவருடன் மனோபாலாவும் […]

Continue Reading

விவேக் மைத்துனருக்கு கொரோனா

கொரோனா வைரசால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகிற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும் அனுபம்கெர் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார். Vivekh […]

Continue Reading

அமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா

        இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோய் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமீர்கானின் பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து அமீர் கான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கொரோனா […]

Continue Reading

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்த பாடகர் வேல் முருகன்!!

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்த பாடகர் வேல் முருகன்!! சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய […]

Continue Reading