அமரர் ஆனார் ஆதித்யன்

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை. இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர். ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். […]

Continue Reading

பழைய கூட்டணியுடன் புதிய படத்தில் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு […]

Continue Reading

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன்.                                            இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.  […]

Continue Reading

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2!

  “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் […]

Continue Reading

விமர்சனங்களுக்கு மதிப்பளித்த இயக்குனர்!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும், படத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதிலும் விமர்சகர்களுக்கும் ஒரு பங்குண்டு. அதுவும் படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகனுக்கு படத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகிறது இப்போதெல்லாம். இதனாலேயே பல இயக்குனர்களுக்கு விமர்சகர்களின் மீது மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. எதார்த்தம் இதுவாக இருக்க, கடந்த வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்கு வந்துகொண்டுள்ள எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விமர்சகளின் கருத்திற்கு மதிப்பளித்து […]

Continue Reading

மீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]

Continue Reading

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்!

வலுவான கதைதளத்துடனும், ஆழமான உறவுப் பின்னல்களையும் கொண்டு படம் செய்யக் கூடிய இயக்குனர் சுசீந்திரனின் மேல் நமக்கிருக்கும் அதீத எதிர்பார்ப்பை இந்த “நெஞ்சில் துளிவிருந்தால்” அசைத்துப் பார்க்கிறது. வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி மாவீரன் கிட்டு வரையிலாயிலான (ராஜபாட்டை நீங்கலாக) அவரது படங்கள் போலவே இதிலும் ஒரு களம் இருக்கிறது. நட்பு, குடும்பப் பாசம், மருத்துவப் படிப்பு மோசடி என வலுவான ஒரு களம் இருந்தும் இம்மூன்றில் எதை அழுத்தமாகக் கையாளலாம் என்பதில் இயக்குனருக்குக் குழப்பம் இருந்ததாகவேத் […]

Continue Reading