அமரர் ஆனார் ஆதித்யன்

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை. இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர். ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். […]

Continue Reading

ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்

கே.எஸ்.அதியமான் இயக்கிய ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தின் மூலம் திரையுலகுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ப்ரியன். இவர், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு என பல முன்னனி நாயகர்களுடன் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னனி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வந்த ப்ரியன், கே கே நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

Continue Reading