தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்குவேன் – கமல்!

“ஜனவரி 26-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என நடிகர் கமலஹாசன் அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நேரடி அரசியலில் முழுவீச்சில் செயல்பட தயாராகியுள்ள கமல், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியுள்ளார். விழாவில் கமல் பேசியதாவது, “கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல […]

Continue Reading

மெர்சல் வழக்கு.. மனுதாரரை மெர்சலாக்கிய நீதிபதிகள்!

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகக் காட்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் […]

Continue Reading

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]

Continue Reading

2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

8-8-1942 அன்று பம்பாய் நகரில் (தற்போதைய மும்பையில்) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று மாலை பம்பாயில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அமைதியான அறவழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். புனேவில் உள்ள ஆகா கான் […]

Continue Reading