மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்” இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி  குக்கூ,விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார். மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை […]

Continue Reading

1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகி உள்ளது ” நான் அவளை சந்தித்தபோது “

  1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை  கொண்டு உருவாகி உள்ளது ” நான் அவளை சந்தித்தபோது ” சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும்  படம் “ நான் அவளை சந்தித்த போது “  இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.  மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Continue Reading

“நீலம் புரொடக்சனஸ்” தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு தொடங்கியது!!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார்.“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “மகிழ்ச்சி” ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “கபாலி”, ” காலா” ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார். சென்னையில் […]

Continue Reading

மீனவர்களின் கதையை படமாக்கும் கிராபிக்ஸ் கலைஞன்

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `உள்குத்து’. `திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக கார்த்திக் ராஜு – தினேஷ் இணைந்துள்ளனர். அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கின்றனர். விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கார்த்திக் ராஜூ, “என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், […]

Continue Reading

பிரபல தயாரிப்பாளரின் மகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து […]

Continue Reading

தம்பி ராமையாவின் உலகம் விலைக்கு வருது

மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களைத் தொடர்ந்து தம்பி ராமையா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகனான உமாபதி அறிமுகமான `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், உமாபதியை வைத்து தானே படம் ஒன்றை இயக்க தம்பி ராமையா முடிவு செய்து அதற்கு `உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார். மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விவேக் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், […]

Continue Reading