செயல் தலைவர், தலைவரானார்.. தி.மு.க-வின் புதிய அத்தியாயம் தொடங்கியது!

தி.மு.க. தலைவர் திரு. கலைஞர்.மு. கருணாநிதி அவர்களின் மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி வெற்றிடமானது. அந்த இடத்தினை நிரப்புவதற்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் […]

Continue Reading

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக போராட்ட விவரம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தியிருந்தன. அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது. திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் திருவள்ளூரில் மாலை 6 […]

Continue Reading

நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு […]

Continue Reading

தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது – உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் யாருடைய வாரிசு என்பது நாமனைவரும் அறிந்ததே.. யார் யாருக்கோ அரசியல் ஆசை இருக்கும் போது இவ்வளவு பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து விட்டு அரசியலில் இருந்து அவர் எப்படி அரசியலுக்கு வராமல் போவார். அவருக்கு நடிப்பெல்லாம் பார்ட் டைப் வேலை போல தான். தன்னை தமிழகத்தின் கடைசி வரை கொண்டு சேர்த்துக் கொள்ள சினிமாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. காலம் வருகையில் கோதாவில் இறங்குவார் என்பதே அரசியல் அறிந்தவர்களின் கணிப்பாக இருந்து […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் குறித்து விஷால்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கால் அவதிப்பட்ட மக்கள்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அரசு தரப்பில் மூன்று விதமான சம்பள உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு குறைவான ஊழியர்களுக்கு 2.44 மடங்கும், 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பவர்களுக்கு 2.41 மடங்கும், 2013-ம் […]

Continue Reading

நாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி […]

Continue Reading

அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, கடந்த 2008ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதுபற்றிய வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் […]

Continue Reading

ஆர் கே நகர் வேட்பாளர் இறுதிப் பட்டியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் உள்ளிட்ட 145 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் நடிகர் விஷால், […]

Continue Reading

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading