செல்வி ஜெ ஜெயலலிதாவை ’தலைவி’யாக திரைக்கு கொண்டு வருகிறார் இயக்குனர் விஜய்!

செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி” விஜய் இயக்கத்தில் உருவாகிறது. மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் தினமான இன்று இயக்குனர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் தான் ஜெயலலிதா அவர்களின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் […]

Continue Reading

அனிதாவை பலி வாங்கிய நீட் தேர்வு தேவையில்லை..!!- ஜி.வி. பிரகாஷ்

நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading

ஜி.வி.பிரகாஷ் அரசிடம் வைத்த கோரிக்கை!

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய “ஓக்கி” புயலில் பாதிக்கப்பட்டு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி கன்னியாகுமரியில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அரசிற்கு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில், “நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

மீண்டும் இணைந்த “விர்ஜின் பசங்க” கூட்டணி!

“அடல்ட் காமெடி” ட்ரெண்டிற்கு புள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். “திரிஷா இல்லனா நயன்தாரா” என்று படமெடுத்து இளைஞர்களை “கிளர்ந்தெழச்” செய்தார். முதல் படத்திலேயே இந்த மகத்தான சாதனையை செய்த ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படமாகிய சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தை ரசிகர்கள் சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தினால் வெற்றிபெறாமல் போனது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஆதிக். “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் […]

Continue Reading

சீறிய “லிட்டில் இளைய தளபதி” ஜி.வி.பிரகாஷ்!!

  இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். வரிசையாக அதிகமான படங்களில் நடித்து வரும் அவருக்கு “லிட்டில் இளைய தளபதி” என்று பட்டம் சூட்டியிருப்பதாக ஒரு செய்தி சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. இதையறிந்த ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது, “இது போன்ற தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்றேத் தெரியவில்லை. யாடுடைய பட்டத்தையும் யாராலும் பெற முடியாது. இளைய தளபதி என்றால் அது […]

Continue Reading