அதீத எதிர்பார்ப்பில் பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’!

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. நாடகக் கலைஞர்களை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாலாஜி தரணிதரன் தெரிவித்துள்ளார். சினிமாவின் அடித்தளமே இந்த நாடகக் கலைதான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த ‘சீதக்காதி’ அமையும். இப்படத்தை நாடகக் கலைஞர்களுக்காக சமர்ப்பிப்பதாகவும் இயக்குனர் கூறியிருந்தார். பல படங்கள் 20ஐ குறிவைத்தாலும் அதீத எதிர்பார்ப்பில் ‘சீதக்காதி’ இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்!

விஜய் சேதுபதியைத் தேடி நல்ல கதைகளோடு இயக்குனர்கள் போகிறார்களா? இல்லை, நல்ல இயக்குனர்களை தேடி விஜய் சேதுபதி வளைத்துப் பிடிக்கிறாரா?… வரிசையாக இப்படி நல்ல நல்ல படங்களை எப்படித்தான் பிடிக்கிறாரோ மனிதர்! கதையைப் பிடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை அச்சு பிசகாமல் நடித்துத் தருவதிலும் அவர் வேறு ஒரு ஆளாக நிற்கிறார். திருஷ்டி கோலி போட்டுக் கொள்ளுங்கள் மக்கள் செல்வரே! விஜய் சேதுபதிக்கு அப்புறம் வருவோம். “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” […]

Continue Reading

என் வாழ்வின் முக்கியமான படம்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]

Continue Reading

நடிகையாகிறார் யார் கண்ணன் மகள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் “யார்”. அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தான் கண்ணன். பின்னர் ‘யார் கண்ணன்’ என்ற பெயரில் பல படங்களை இயக்கினார். இயக்குனர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. அவர் எழுதிய “அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா” என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. சமீபத்தில் நடிகரான இவர் பல படங்களில் நடித்து […]

Continue Reading

விழா மேடைகளில் விவசாயிகள் நலன் இது அபிசரவணன் ஸ்டைல்

நடிகர் அபி சரவணன் – நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. பொதுவாக அனைத்து இசை வெளியீடுகளிலும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். ஆனால் இதில் சற்று மாறுபட்டு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெற்றோர்கள் பாடல்களை வெளியிட பிள்ளைகள் பெற்று கொண்டார்கள். அந்த வகையில் நடிகர் அபிசரவணன் பேசும் போது, எனது தந்தை ராஜேந்திரபாண்டியன், தாயார் பிரேமகலாவதி ஆகியோரால் இந்த படத்தின் பாடல்கள் […]

Continue Reading

புரியாத புதிருக்கு விடிவு காலம் வந்தாச்சு

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதியுடன் மாதவன், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘புரியாத புதிர்’ திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட […]

Continue Reading