மெளனம் காக்கும் ரகுல் ப்ரீத்?

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது. கார்த்தியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் சார்பில் […]

Continue Reading

வேட்டைக்குத் தயாராகும் கார்த்தி!

சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. 1995 லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு உண்மையான க்ரைம் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வெளியாகி அனைத்து […]

Continue Reading

கலாமின் நினைவுகளுடன் பயணிக்கும் இளைஞர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியிருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை ஆல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அதில், “கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இசை ஆல்பம் பற்றி பேசிய இயக்குனர் வசந்த், “காந்திக்குப் பிறகு ஒரு மாபெரும் தலைவரை இந்த தேசம் கண்டது. அவரது சிந்தனைகளை மறவாமல் இருக்க […]

Continue Reading

கலாமுக்காக பாடல், நெகிழ்ச்சியில் கவிஞர்

  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘கலாம் ஆந்தம்’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்படுகிறது. இந்த பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், வசந்த் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த ‘கலாம் ஆந்தம்’-ஐ ‘மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்’-ன் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு […]

Continue Reading

டுவிட்டரில் `விஸ்வரூபம்-2′ குறித்து புதிய தகவல்

கமலஹாசன் இயக்கத்தில் அவரே நடித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டதால், கமல் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்கள் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, `சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம்’ […]

Continue Reading

ஆடும் அழகில் மயங்கிய சந்தானம்

சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இப்படத்தின் கதாநாயகியாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். மேலும், ரேணுகா, மன்சூரலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகி பாபு, மது சூதனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் அமைரா தஸ்தூர் ஜாலியாக ஆடி, பாடிய […]

Continue Reading

அறம் படத்தில் உதவி இயக்குநரா நயன்தாரா?

அறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்த நயன்தாரா பற்றி கூறிய கோபி நயினார் , “அறம் படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தனது காட்சிகள் முடிந்தாலும் செட்டிலேயே இருப்பார். மற்றவர்கள் நடிப்பதை கண்காணிப்பார். ‘அறம்’ படத்தை 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார். கடுமையான வெயிலிலும் நடிகர் நடிகைகள் போராட்ட காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என் […]

Continue Reading