அறம் இரண்டாம் பாகத்தில் இவரா?

பல வருட காத்திருப்பையும், பல வருட உழைப்பையும் ஒரே படத்தில் கொட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் இயக்குநர் கோபி நயினார். “அறம்” போல வலுவான, நேரடியான அரசியல் பேசும் படம் இனி தமிழ் சினிமாவில் வருமா? என்பது கேள்விக்குறி. ஏன், கோபியாலேயே அது சாத்தியாமா? என்பதும் சந்தேகமே. அப்படியொரு கதைக்களத்தை மையமாக வைத்து கதை சொன்ன கோபி நயினார், அடுத்த படத்தில் சித்தார்த்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருந்த “அறம்” படத்திற்கு கிடைத்த […]

Continue Reading

எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் […]

Continue Reading

உடைந்தழுத உமாதேவி!

கோபி நயினார் இயக்கத்தில் சமீபமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “அறம்”. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சுனு லக்ஷ்மி, ராமச்சந்திரன், பழனி பட்டாளம் என அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது தரமான இசையால் படத்தை உணர்வுப் பூர்வமானதாக்கியிருப்பார். “அறம்” திரைப்படத்தின் வெற்றியில் பாடலாசிரியர் உமாதேவிக்கும் பங்குண்டு என்றே சொல்லலாம். தனது ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளின் மூலம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களிமே காண்போரையும், கேட்போரையும் கலங்க […]

Continue Reading