பனாரஸ் பல்கலை தேர்வில் சாணக்கியரின் ஜி எஸ் டி

உத்தரப்பிரதேசம் மாநிலம் பணாரஸ் நகரில் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு எம்.ஏ படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பண்டைய மற்றும் மத்திய இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் பார்வை’ என்ற பாடத்திற்கான தேர்வில், ‘சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி குறித்து கட்டுரை எழுதுக’ என்று ஒரு கேள்வி இருந்துள்ளது. இதேபோல, ‘உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த இந்தியர் மனு – விவாதிக்க’ என்று மற்றொரு கேள்வி இருந்துள்ளது. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் […]

Continue Reading

பிரதமர் மோடியின் லட்சியம்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் […]

Continue Reading

மெர்சல் வழக்கு.. மனுதாரரை மெர்சலாக்கிய நீதிபதிகள்!

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகக் காட்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் […]

Continue Reading

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]

Continue Reading

ரஜினி, கமலிடம் வேண்டுகோள் வைத்த அல்போன்ஸ் புத்திரன்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மேலும், “சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு […]

Continue Reading

இந்தாண்டு வளர்ச்சி குறைவாக இருக்கும் : அரசு ஆய்வறிக்கை

அரசின் இரண்டாவது பொருளாதார அறிக்கையில் 2017-18 ஆம் ஆண்டிற்காக பொருளாதார வளர்ச்சி 6.75-7.50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த ஜனவரியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.75-7.50 சதவீதத்தில் வளர்ச்சியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிக்கை பொருளாதாரம் முழுமையாக துடிப்புள்ளதாக மாறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என்று கூறியுள்ளது. பொருளாதாரத்தில் விவசாய வருமானத்தின் மீதான அழுத்தம், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் அரசின் நிதிநிலையில் இறுக்கம் மட்டுமின்றி மின்சாரம் […]

Continue Reading

தள்ளிப்போன பண்டிகை ரிலீஸ்

கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலட்சுமி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை இன்று வெளியிட இருந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தைத் […]

Continue Reading

திரையை விலக்கிய திரையரங்க உரிமையாளர்கள்

T மத்திய அரசால் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே வரி அமல்படுத்தப்பட்டது. இதில் திரைப்பட கட்டணங்களுக்கு 18-28 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 30 சதவீத வரியை தமிழக அரசு விதித்தது. மாநில அரசு விதித்த இந்த 30 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்துவது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு […]

Continue Reading