அதிரடி காட்ட தயாராகும் இளையராஜா – யுவன் – விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி!!

சீனு ராமசாமி இயகக்த்தில் விஜய் சேதுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான தர்மதுரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றியின் எதிரொலியாக மீண்டும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது. இம்மாபெரும் கூட்டணியோடு கூடுதல் பலமாக இசைஞானி இளையராஜாவும் சேர்ந்துள்ளது படக்குழுவை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது யூ ஒன் ரெக்கார்ட்ஸ் மூலம் அவரே தயாரிக்கிறார். படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

கலைஞருக்கு இசைஞானியின் அஞ்சலி!!

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்கள்,அரசியல்வாதிகள்,திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே என, ஆஸ்திரேலியாவிலிருந்து இசைஞானி இளையராஜா வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். “டாக்டர் கலைஞர் ஐயா மறைந்த இந்த தினம் ஒரு துக்ககரமான தினம். அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் […]

Continue Reading

இசைத் தலைவனை தமிழில் வாழ்த்திய குடியரசுத் தலைவர்!!

இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குத் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர். இசை ரசிகர்களால் ‘ராகதேவன்’ என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. அவருக்கு இன்று 75வது பிறந்த நாள். இதை முன்னிட்டுப் பலரும் அவருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், தன்னுடைய வாழ்த்தைத் தமிழில் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற இசைக் கலைஞர், இசை மாமேதை தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading

கலைத்தாயின் தலைமகனைக் கொண்டாடுவோம்!

உயிர் ஜனிக்கும் நொடியில் மழலையின் முதல் அழுகுரல் தாய்க்கு இசைதான். மரணம் என்பதை உறுதி செய்து கொள்ள முன்னாளில் மனிதன் பயன்படுத்திய தோல்பறை அதிர்வும் இசை தான். பிறப்பின் ஆதி முதல் இறப்பின் அந்தம் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு அணுப் பொழுதிலும் இயைந்திருப்பது இசையன்றி வேறேதும் இல்லை. அப்படி இசையை பிறப்போடும் இறப்போடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்ள நம்மையெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தினார் என்று பெருமை கொள்ள வேண்டுமெனில், அது இசைஞானி இளையராஜா என்பவராகத் தான் இருக்க […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது. வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை […]

Continue Reading