இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

கலைத்தாயின் தலைமகனைக் கொண்டாடுவோம்!

உயிர் ஜனிக்கும் நொடியில் மழலையின் முதல் அழுகுரல் தாய்க்கு இசைதான். மரணம் என்பதை உறுதி செய்து கொள்ள முன்னாளில் மனிதன் பயன்படுத்திய தோல்பறை அதிர்வும் இசை தான். பிறப்பின் ஆதி முதல் இறப்பின் அந்தம் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு அணுப் பொழுதிலும் இயைந்திருப்பது இசையன்றி வேறேதும் இல்லை. அப்படி இசையை பிறப்போடும் இறப்போடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்ள நம்மையெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தினார் என்று பெருமை கொள்ள வேண்டுமெனில், அது இசைஞானி இளையராஜா என்பவராகத் தான் இருக்க […]

Continue Reading

சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading

மொட்டை போட்டு, புருவத்தையும் எடுத்து விட்டார்கள் : இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, “நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது […]

Continue Reading