தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள்

    உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது. ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது. இப்படத்தில்தான் அவதார் படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள். தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது. இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Continue Reading

தண்ணீருக்குள் புதிய அவதாரம்

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

Continue Reading

அவதாரின் அடுத்த அவதாரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’. இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும் ‘அவதார்’ முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் 2′ 2014-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அப்படம் வெளிவரவில்லை. இதுகுறித்து கடந்த […]

Continue Reading