‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு

  புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது.  ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக […]

Continue Reading

29-வது முறையாக இணையும் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

Continue Reading

ஆர் கே நகர் வேட்பாளர் இறுதிப் பட்டியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் உள்ளிட்ட 145 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் நடிகர் விஷால், […]

Continue Reading

சுயேட்சை வேட்பாளராக விஷால்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

தை மாதம் ஜெ.,யின் உண்மை ஆட்சி : தினகரன்

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சாமி கும்பிட வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. தற்போது காட்டாட்சி நடக்கிறது. கந்துவட்டிக்கு எதிராக ஜெயலலிதா வலுவான சட்டம் கொண்டு வந்தார். தற்போது இருப்பவர்கள் பதவி சுகத்திற்காக ஆட்சியில் உள்ளனர். விரைவில் அவர்கள் வீட்டுக்கு செல்லும் காலம் வரும். வரும் தை மாதத்திற்குள் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

வித்யாசாகர் ராவ் அப்போலோ நிகழ்வுகள் பற்றி எழுதிய புத்தகம்

தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிந்ததையடுத்து தமிழக பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றினார். அவர், 398 நாட்கள் தமிழக கவர்னர் பணியில் இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா மரணம், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம் என பல பிரச்சினைகள் வந்தன. இந்த வி‌ஷயங்களை குறிப்பிட்டு வித்யாசாகர்ராவ் 148 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தோஸ் […]

Continue Reading

இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் சிவாஜி, கமலை விட நல்ல நடிகர்கள் – விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்டித்து தேமுதிக சார்பில் இன்று மதியம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை கூறுகிறது. நெல்லையில் கந்து […]

Continue Reading

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் […]

Continue Reading