யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். https://www.youtube.com/watch?v=54UK3qsnjk4 https://www.youtube.com/watch?v=4tEBsWhxEw4&feature=youtu.be இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர்  தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. படத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.

Continue Reading