ஹீரோக்களை தெறிக்கவிடும் ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின்கள் காலம் தான். நயன்தாரா, திரிஷா, ஜோதிகா, அமலா பால், வரலட்சுமி சரத்குமார், ஓவியா என அனைவருமே தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியுள்ளனர். இவர்கள் “சோலோ”வாக நடிக்கக் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து புதுமுக இயக்குநர்கள் மட்டுமல்லாது, முன்னணி இயக்குநர்களும் “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளைத் தயார் செய்வது கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருகிறது. மாயா, டோரா, அறம் என “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளுக்கு புள்ளையார் சுழி போட்டவர் நயன்தாரா தான். இப்போது கூட “மா” குறும்பட […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading

நாச்சியாரும், பண்பாட்டுக் காவலர்களும் !

நிச்சயமாக ஜோதிகாவுக்கோ, பாலாவுக்கோ முட்டுக் கொடுக்கப் போவதில்லை இந்தக் கட்டுரை. எழுதக் கூடாதென்று நினைத்து நாச்சியார் விவகாரத்தைத் தவிர்த்தே வந்தேன். லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகளுக்கு அமைதியாக வேடிக்கைப் பார்த்தது போலவே, நாச்சியார் சலசலப்புகளையும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கடந்து விடலாம் என்பதில் மண்ணள்ளிப் போட்டது ஒரு வீடியோ. அந்த வீடியோவில், “வேறு யாரோ தெருவில் போறவங்களோ, யாராவது துணை நடிகைகளோ, ஆண் நடிகர்களோ அந்த சர்ச்சைக்கு வித்திட்ட வார்த்தையை (இனி அந்த வார்த்தையை […]

Continue Reading

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். […]

Continue Reading

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது. வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை […]

Continue Reading