கமலுக்கு போட்டியான ஜெயப்பிரதா!

நேற்று முழுவதுமே தமிழகமெங்கும் கமல்.. கமல்.. கமல் தான். அரசியல் பிரவேசத்தின் முதல் நாளில் சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் கமல். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே அவரைப்பற்றிய பேச்சுக்களாகத் தான் இருந்தது. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் கமல் #ஹேஸ்டேக் ஈடாக #கேணி ஹேஸ்டேக்கும் ட்ரெண்டின்கில் இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. கமலுடன் பல படங்களில் நடித்தவரும், கமலின் நெருங்கிய நண்பருமான நடிகை ஜெயப்பிரதா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “காற்று, வானம், […]

Continue Reading

கமலின் அரசியல் பயண விவரம்

  நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்க இருக்கிறார்.   வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில்,    காலை 7.45 மணியளவில் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார்.    காலை 8.15 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார்.    […]

Continue Reading

காவிரி நீர் தீர்ப்பு ஏமாற்றமே- நடிகர் கமல்ஹாசன்

  தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசும் போது,   “தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் […]

Continue Reading

மத்திய அரசின் கடைக்கண் பார்வையும், பாராமுகமும் : கமல்

வருகிற 10-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக் கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘தமிழகம்’ என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இதில் தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து கூறுகிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மத்திய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாகவே தமிழகம் புறக்கணிக்கப்படுவது சோகம் என்றாலும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பக்கம் சற்றே கடைக்கண் பார்வை […]

Continue Reading

அடுத்த சர்ச்சை மலையாள சினிமாவில்..

ஒரு திரைப்படம் எடுத்து வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை இப்போதெல்லாம். அதுவும் உண்மையான வரலாற்றை படமாக எடுக்க நினைத்தால், அவ்வளவு தான் முடிந்தது கதை. சமீபத்தில் மெர்சல், பத்மாவதி என சர்ச்சைகள் தீயாய் பரவியது. அதிலும் பத்மாவதி ஒருபடி மேலே போய், பல மாநில அரசுகளே தடை செய்யும் அளவிற்குப் போனது. இந்த வரிசையில் ஒரு மலையாளப் படமும் இணைந்திருக்கிறது. இயக்குனர் கமல் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஆமி” படத்திற்கு எதிராக கேரள உயர்நீதி […]

Continue Reading

கல்லூரி நிகழ்ச்சியில் கமல் பேச்சு

சாய்ராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், “நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் […]

Continue Reading

நமக்கு விரோதிகள் சமூகத்திற்கும் விரோதிகள் தான் : கமல்

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி தனிக் கட்சி தொடங்கி அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார். இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார். கொடி, சின்னத்தையும் வெளியிடுகிறார். தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார். அதன்பிறகு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை […]

Continue Reading

தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்குவேன் – கமல்!

“ஜனவரி 26-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என நடிகர் கமலஹாசன் அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நேரடி அரசியலில் முழுவீச்சில் செயல்பட தயாராகியுள்ள கமல், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியுள்ளார். விழாவில் கமல் பேசியதாவது, “கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல […]

Continue Reading

கட்சி அறிவிப்பிற்கு தேதி குறித்த கமல்!

கமல்ஹாசனின் அரசியல் கட்சி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான […]

Continue Reading