விஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் […]

Continue Reading

அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தில் கமல் மகள்

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷராஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இதுபற்றி விசாரித்தபோது, “ராஜேஷ் எம்.செல்வா படத்தில், விக்ரம் நடிப்பது உண்மை. அவருடன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிப்பதும் உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அக்‌ஷராஹாசன், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நடிக்கும் […]

Continue Reading

ஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார். திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும் போது, “மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை, பாலிசி என்ன என்று கேட்கிறார்கள். மக்கள் நலம் தான் எங்கள் கொள்கை என ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆனாலும் திரும்ப திரும்ப […]

Continue Reading

லட்சுமி சரவணகுமாரின் வசனத்தில் கமலின் புதிய படம் ?

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம்-2 படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கமல் தற்போது அரசியலில் பிசியாகி இருக்கிறார். கமல்ஹாசன் அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு படத்தினை தொடங்கினார் சங்கர். படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற மே மாதம் துவங்க இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய […]

Continue Reading

எந்திரன்-2 பாணியில் இந்தியன்-2

தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். இதையடுத்து இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். […]

Continue Reading

இந்த ஆட்சியில் மட்டுமல்ல, முந்தைய ஆட்சியிலும் இப்படித்தான் : பார்த்திபன்

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன், “ஓட்டு போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. நான் அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசவில்லை. இந்தந்த துறைகளில் இதுமாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்கள் பொறுப்பு. ஒரு துறையில் தவறு நடந்து விட்டது. மேற்கொண்டு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று அவர்கள் பதில் சொல்லலாம். அதைவிடுத்து ‘நீங்கள் நிரூபியுங்கள்… பார்க்கலாம்’, என்று சொல்வது தேவையற்றது. சினிமாவில் இருக்கும் பலருக்குத் தைரியம் […]

Continue Reading

கமல் டுவிட்டர் பதிவு குறித்து விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘துப்பறிவாளன்’. படத்தில் விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான டீசர் வெளியீடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் நிகழ்ச்சியின் இறுதியில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்து நிருபர்களுக்கு பதிலளித்த விஷால், “கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவற்றையெல்லாம் […]

Continue Reading

`சத்யமேவ ஜயதே’ குறித்த கேள்விக்கு கமலின் பதில்

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதைத் தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார். இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை […]

Continue Reading