ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் […]

Continue Reading

வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா  தளபதி ஆக்‌ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்‌ஷனுக்கு தந்தையும் […]

Continue Reading

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் […]

Continue Reading

உலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்..!!

கோவா உலகத் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த திரைப்பட விழாவிற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்த்துவிட்டு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரத்தோடு படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக படம் முடிந்து வந்த பார்வையாளர்கள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் உள்ளிட்ட குழுவினரை கட்டிப்பிடித்து பாராட்டினர். மிகச்சிறந்த திறைப்படத்தை உருவாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் இந்தப் படம் இன்னும் பல்வேறு விருதுகளைப் […]

Continue Reading

அனிதாவை பலி வாங்கிய நீட் தேர்வு தேவையில்லை..!!- ஜி.வி. பிரகாஷ்

நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் […]

Continue Reading

சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்..!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.    படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.    இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் […]

Continue Reading

பரியனை வாழ்த்திய பிரம்மாண்ட இயக்குனர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’. கிராம வாழ்க்கையை, ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தினை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பெரும் நட்சத்திரங்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் வாழ்த்துக்களை பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படும் […]

Continue Reading

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேரும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

Continue Reading