தமிழில் பாராட்டு.. மலையாளத்தில் விருது.. சாதித்த இயக்குநர்!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி”. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் […]

Continue Reading

கேணி – விமர்சனம்!

ஆக்ரோஷ சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த கொஜமுஜா வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு தமிழ் சினிமா. பசுமைக்கும் வறட்சிக்கும் சூத்திரமாய், மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் திரைப்படம் “கேணி”. கேரள – தமிழ்நாடு எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்ட கதையில், அந்தக் கேணி காட்டப்படும் போதெல்லாம் “முல்லைப் பெரியாறு அணை” தான் நினைவுக்கு வந்துவந்து போகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக […]

Continue Reading

கமலுக்கு போட்டியான ஜெயப்பிரதா!

நேற்று முழுவதுமே தமிழகமெங்கும் கமல்.. கமல்.. கமல் தான். அரசியல் பிரவேசத்தின் முதல் நாளில் சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் கமல். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே அவரைப்பற்றிய பேச்சுக்களாகத் தான் இருந்தது. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் கமல் #ஹேஸ்டேக் ஈடாக #கேணி ஹேஸ்டேக்கும் ட்ரெண்டின்கில் இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. கமலுடன் பல படங்களில் நடித்தவரும், கமலின் நெருங்கிய நண்பருமான நடிகை ஜெயப்பிரதா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “காற்று, வானம், […]

Continue Reading

முல்லைப் பெரியாறு.. பாலாறு.. காவிரியை நினைவூட்டும் கேணி!

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகாவோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் […]

Continue Reading

என் மகள் நடிக்க விரும்பவில்லை – நடிகை ரேகா விளக்கம்!

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.   இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது.   இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் “மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் […]

Continue Reading